நாட்டின் 8 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் கடுமையான மின்னல், இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ மாகாணத்திலும், களுத்துறை, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பெய்யக்கூடியதுடன், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது பலத்த காற்றும் வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கம்பஹா, கேகாலை, கொழும்பு, நுவரெலியா, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு காலநிலை நிலைமைகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மின்னல் மற்றும் சூறாவளியால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.