11 மாதங்களுக்கு முன்பு ரஷ்யாவின் உக்ரைன் ஆக்கிரமிப்பு தொடங்கியதில் இருந்து, மிக மோசமான தாக்குதல்களில் ஒன்றாக பார்க்கப்படும் டினிப்ரோ தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.
உக்ரைனின் அவசர சேவைகள் 3 சிறுவர்கள் உட்பட 40பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 34 பேர் இன்னும் கணக்கில் வரவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
தாக்குதல்களுக்கு உள்ளான கட்டடங்களின் இடிபாடுகளில் இருந்து அதிகமான உடல்கள் எடுக்கப்பட்டு வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்ககூடுமென அஞ்சப்படுகின்றது.
இரண்டு நாட்களுக்கு முன்னர் மத்திய உக்ரைனில் நடத்தப்பட்ட குடியிருப்பு கட்டடத்தின் மீதான தாக்குதலுக்கு ரஷ்யாவே காரணம் என உக்ரைன் குற்றஞ்சாட்டினாலும், அதனை ரஷ்யா மறுத்துள்ளது. இதற்கு உக்ரைனிய வான் பாதுகாப்பு அமைப்புகளே காரணம் என ரஷ்யா கூறியுள்ளது.
:ரஷ்ய ஆயுதப்படைகள் குடியிருப்பு கட்டடங்கள் அல்லது சமூக உள்கட்டமைப்புகளை தாக்குவதில்லை. அவர்கள் இராணுவ இலக்குகளைத் தாக்குகிறார்கள்’ என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறினார்.