ஜேர்மனி பாதுகாப்புத்துறை அமைச்சர் கிறிஸ்டைன் லாம்ப்ரெட் தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.
ரஷ்யாவின் தாக்குதலுக்கு எதிராக உக்ரைனின் ஆயுதப் படைகள் வெற்றிபெற உதவுவதற்காக உக்ரைனுக்கு இராணுவ ஆதரவை அதிகரிப்பதற்கு ஜேர்மனி ஆலோசித்துள்ள நிலையில் அவரது பதவி விலகல் வந்துள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு முதல் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்து வந்த அவர், முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பொறுப்பில் மேம்போக்காக இருந்து வந்ததாக விமர்சனங்கள் எழுந்ததையடுத்து தனது பதவியை இராஜினாமா செய்தார்.
பாதுகாப்புத் துறை நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக பதவியிலிருந்து விலகுவதாக லாம்ப்ரெட் அறிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்ததை ஜேர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், ஏற்றுக்கொண்டதாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் கூறினார்.
ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்குத் தேவையான இராணுவ உதவிகளை அளிப்பதில் லாம்ப்ரெட் தயக்கம் காட்டி வந்ததாக குற்றம் சாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.