அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய வசந்த முதலிகேவை எதிர்வரும் 31ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் இன்று(செவ்வாய்கிழமை) ஆஜர்ப்படுத்தப்பட்ட போது, இந்த விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.