உக்ரைனில் ரஷ்யாவுக்கு ஆதரவாக போரிட்டுவரும் ரஷ்யாவின் வாக்னர் குழுவை நாடுகடந்த குற்றவியல் அமைப்பாக அமெரிக்கா அறிவிக்கவுள்ளது.
அடுத்த வாரம் இந்த குழு மற்றும் ஆதரவு வலையமைப்பு மீது புதிய தடைகளை அமெரிக்காவின் வெள்ளை மாளிகை, விதிக்கும்.
இது, சிரியா, லிபியா மற்றும் மத்திய ஆபிரிக்கக் குடியரசில் மற்ற இடங்களில் செயற்பட்டு வந்த துணை இராணுவக் குழுவிற்கு எதிராக பரந்த பொருளாதாரத் தடைகளைப் பயன்படுத்த அமெரிக்க அரசாங்கத்தை அனுமதிக்கும்.
இந்தக்குழு, உக்ரைன் மற்றும் பிற இடங்களில் அட்டூழியங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை செய்கிறது என தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி கூறினார்.
உக்ரைனில் இப்போது சுமார் 50,000 வாக்னர் கூலிப்படையினர் இருப்பதாக அவர் கூறினார்.
கிர்பியின் கூற்றுப்படி, உக்ரைனுக்கு அனுப்பப்பட்ட வாக்னர் துருப்புக்களில் சுமார் 80 சதவீதம் சிறைகளில் இருந்து எடுக்கப்பட்டவர்கள்.
இந்தக் குழு ரஷ்யாவின் வழக்கமான இராணுவப் படைகளுக்கு போட்டியாக மாறியுள்ளது என்றும், வட கொரியாவிற்குள் ரஷ்ய ரயில் கார்கள் நுழைவதை அமெரிக்க உளவுத்துறை புகைப்படங்கள் காட்டுவதாகவும் கிர்பி கூறினார்.