சீன சுற்றுலாப் பயணிகளுக்காக சீனா மீண்டும் ஆரம்பித்துள்ள முன்னோடித் திட்டத்தில் இலங்கையும் இணைக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து, இந்தோனேஷியா, கம்போடியா, மாலைத்தீவு, இலங்கை, பிலிப்பைன்ஸ் ஆகிய 20 நாடுகளுக்கு, சீனர்கள் வெளிச்செல்லும் முன்னோடித் திட்டத்தை சீன கலாச்சார மற்றும் சுற்றுலா அமைச்சு அறிவித்துள்ளது.
3 வருடங்களின் பின்னர் வெளியாகிய இந்த அறிவிப்பில், இலங்கையும் இணைக்கப்பட்டுள்ளமையானது இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த உதவும் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும், இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப இது உதவும் என்றும் சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
சீன கலாச்சாரம் மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2019ஆம் ஆண்டில், சீனர்கள் 155 மில்லியன் வெளிநாடுகளுக்கு பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.