நானுஓயா பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற கோர விபத்தின் காணொளிகளை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேற்று நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் ஜீவன் தொண்டமான் “தயவு செய்து விபத்து தொடர்பான கவலை தரும் காணொளிகளை யாரும் சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டாம்” எனவும் கேட்டுக்கொண்டார்.
குறித்த விபத்தானது நேற்று மாலை நானுஓயா – ரதெல்ல பகுதியில் , கொழும்பில் இருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றி வந்த பேருந்து ஒன்று வான் மற்றும் முச்சக்கரவண்டி ஆகியவற்றுடன் மோதுண்டதில் ஏற்பட்டதோடு அதில் ஏழு பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.