வெளிவிகார அமைச்சர் அலி சப்ரி சவூதி அரேபியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி எதிர்வரும் 23ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை அவர் அங்கு தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அமைச்சர் அலி சப்ரி சவூதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சௌதின் அழைப்பின் பேரில் சவூதி அரேபியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விஜயத்தின் போது இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடவுள்ளதோடு இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, வளைகுடா ஒத்துழைப்பு பேரவை மற்றும் மக்கா மற்றும் மதீனா ஆளுநர்களையும் அமைச்சர் சந்திக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.