இந்த வருடத்தில் இதுவரை 72,002 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
ரஷ்யா, இந்தியா, ஜேர்மனி, பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்தே பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
மாதத்தின் 21 நாட்களில் ரஷ்யாவிலிருந்து 17,474 சுற்றுலாப் பயணிகளும், இந்தியாவிலிருந்து 9,181 பேரும், ஜேர்மனியிலிருந்து 6,269 நபர்களும், பிரித்தானியாவிலிருந்து 5,933 பேரும், பிரான்சிலிருந்து 3,342 நபர்களும் வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடி, எதிர்ப்புகள் மற்றும் வெளிப்புற காரணிகளால், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாகக் குறைந்துள்ளது.
இருப்பினும், புதிய அரசாங்கம் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த காலாண்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை படிப்படியாக அதிகரித்துள்ளது.