நுரைச்சோலை அனல்மின் நிலையத்திற்கான நிலக்கரி இறக்குமதிக்கு நிதியளிப்பதற்காக இரண்டு அரச வங்கிகளிடம் கடன் பெறுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது.
அடுத்த மூன்று மாதங்களில் 21 கப்பல்கள் நிலக்கரி இறக்குமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஜனவரி வரும் என எதிர்பார்க்கப்பட்ட 7 நிலக்கரி கப்பல்களில் 5 கப்பல்கள் வந்துள்ளது என்றும் மீதமுள்ள இரண்டு கப்பல்கள் இம்மாதத்திற்குள் வரும் என்றும் அவர் கூறினார்.
வங்கிகளில் இருந்து பெறப்படும் கடன் வசதிகளின் அளவுக்கேற்ப இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்யப்படும் என தெரிவித்தார்.
இதனை கொண்டு குறைந்தளவிலான மின்சார துணிடப்போடு மின்சாரம் வழங்கப்படும் எனவும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.