ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஜேர்மனியுடன் இணைந்து 31 சக்திவாய்ந்த போர் டாங்கிகளை உக்ரைனுக்கு அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
ஜேர்மனி தனது லெபார்ட் 2 டாங்கிகளில் 14யை போர்க்களத்திற்கு அனுப்புவதாக கூறிய சில மணிநேரங்களில் எம்-1 அப்ராம்ஸ் டாங்கிகளை வழங்குவதற்கான அமெரிக்காவின் முடிவு அறிவிக்கப்பட்டது.
உக்ரைன் பல மாதங்களாக இராணுவ உபகரணங்களை அனுப்ப மேற்கத்திய நட்பு நாடுகளை வலியுறுத்தி வருகின்ற நிலையில் இந்த செய்தி வந்துள்ளது.
ரஷ்யா படையெடுத்து ஏறக்குறைய ஒரு வருடத்தை நெருங்கியுள்ள நிலையில், உக்ரைன் இராணுவம் அதன் வேகத்தை மீண்டும் பெறவும், ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தை திரும்பப் பெறவும் அனுமதிக்கும் ஒரு திருப்புமுனையாக இந்த அறிவிப்புகள் உள்ளதாக உக்ரைன் கூறியுள்ளது.
மேலும், வசந்த காலத்தில் சாத்தியமான ரஷ்ய தாக்குதலைத் தடுக்க டாங்கிகள் உதவக்கூடும் என்று உக்ரைன் கூறியது.
எனினும், அமெரிக்காவால் வழங்கப்பட்டுள்ள எம்-1 அப்ராம்ஸ் டாங்கிகளை பராமரிப்பது விலை உயர்ந்தது மற்றும் உக்ரைனிய துருப்புக்கள் கையாளுவது மிகவும் சவாலானது என கூறியுள்ளது.