பெண்களிற்கு பெண்கள் வாக்களிக்க வேண்டும் என பெண் வேட்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) கபே அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கருத்தரங்கானது கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கி பெண் வேட்பாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களை உள்ளடக்கி கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன் போது, பங்குபற்றிய வெவ்வேறு கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழு உறுப்பினர்களிற்கு ஊடக சந்திப்பு ம் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.