அரசியலமைப்பு பேரவையின் இரண்டாவது கூட்டம் இன்று (திங்கட்கிழமை) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.
ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்களை நியமிக்கும் முறை குறித்து ஆராயும் வகையில் அரசியலமைப்பு சபையின் முதலாவது கூட்டம் கடந்த 25ஆம் திகதி இடம்பெற்றது.
இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பில் இன்றைய சந்திப்பின் போது மேலும் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.














