இலங்கையில் 50 சதவீதமான நீரிழிவு நோயாளர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பது கண்டறிப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்றாநோய் பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் சமிந்தி சமரகோன் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிகழும் மரணங்களில் 83 வீதமானவை தொற்றாநோய்களால் பதிவாகுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தாத காரணத்தினால் நோயாளர்களுக்கு சிறுநீரக நோய் அல்லது மாரடைப்பு ஏற்படுவதாக அவர் கூறியுள்ளார்.
சில நோயாளர்கள் உயர் இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்படுவதாகவும் வைத்தியர் சமிந்தி சமரக்கோன் குறிப்பிட்டுள்ளார்.