இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தில் கத்தோலிக்க திருச்சபையின் பிரதிநிதித்துவம் இருக்காது எனகத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரமும் சட்டத்தின் ஆட்சியும் வீழ்ச்சியடைந்துள்ள இந்த நேரத்தில் பெரும் பணத்தை செலவழித்து சுதந்திர தின நிகழ்வை நடத்துவது பெரும் குற்றமும் வீண் விரயம் என்றும் கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.
பொரளையில் உள்ள பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சிறில் காமினி பெர்னாண்டோ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
75 வது சுதந்திர தினத்தை பெருமையாகவும் பிரமாண்டமாகவும் நடத்துவதற்கு அதிக பணம் செலவழிப்பதை கத்தோலிக்க திருச்சபை கடுமையாக எதிர்க்கிறது என்றும் அனைத்து அரசியல் தலைவர்களும் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.