இராணுவத்தால் பாதுகாப்பு நோக்கங்களுக்காக யாழில் கைப்பற்றப்பட்ட 80.14 ஏக்கர் தனியார் காணிகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய விடுவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, பலாலி வடக்கில் 12.14 ஏக்கர், தெல்லிப்பளையில் 0.72 பேர்ச்சஸ், காங்கேசன்துறை மத்தியில் 50.59 ஏக்கர் மற்றும் மைலிட்டி வடக்கில் 16.55 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்திடம் இருந்து காணிகளை பெற்றுக்கொண்ட யாழ் மாவட்டச் செயலாளர், பாதுகாப்புப் படையினருக்கு நன்றி தெரிவித்தார்.