நீண்டகாலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப், டுபாயில் காலமானார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
79 வயதான முஷாரப் டுபாயில் உள்ள மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
1999 இல் அரசாங்கத்தை இராணுவம் கைப்பற்றிய பின்னர் பாகிஸ்தானின் பத்தாவது ஜனாதிபதியான பர்வேஸ் முஷாரப் 1999 முதல் 2002 நவம்பர் வரை பாகிஸ்தானின் தலைமை நிர்வாகியாகவும், ஜூன் 2001 முதல் ஓகஸ்ட் 2008 வரை ஜனாதிபதியாகவும் இருந்தார்.
முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு மற்றும் ரெட் மசூதி மதகுரு கொலை வழக்கில் முஷாரப் தப்பியோடிய நபராக அறிவிக்கப்பட்டார்.
அதன் பின்னர் அவர் மார்ச் 2016 முதல் டுபாயில் வசித்து வந்த முஷாரப் 2007 இல் தேசத்துரோக வழக்கை எதிர்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.