2023 ஆம் ஆண்டுக்கான டேவிஸ் கோப்பை தொடரில் கொலம்பியாவுக்கு எதிராக போட்டியில் கேமரூன் நோரி வெற்றிபெற்றதால் கிரேட் பிரிட்டன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
சனிக்கிழமையன்று நிக்கோலஸ் மெஜியாவை 6-4, 6-4 என்ற கணக்கில் பிரிட்டனின் முதல்நிலை வீரர் நோரி வீழ்த்தியதால் கிரேட் பிரிட்டன் 3-1 என்ற கணக்கில் வெற்றிபெற்றது.
முன்னதாக டேன் எவன்ஸ் மற்றும் நீல் ஸ்குப்ஸ்கி ஆகியோர் இரட்டையர் பிரிவில் செபாஸ்டியன் கபல் மற்றும் ரோபர்ட் ஃபரா ஆகியோரை வீழ்த்தி வெற்றிபெற்றனர்.
கொலம்பியா சார்பில் நிக்கோலா மெய்ஜா ஒற்றையர் பிரிவில் டேனியல் எவன்ஸுக்கு எதிராக ஒரு வெற்றியை பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.