உலக இரும்பரசன் எனப்போற்றப்படும் பேராசிரியர் சாண்டோ சங்கரதாஸின் 120வது ஜனனதினம் மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவரும் போதனாசிரியருமான திருச்செல்வம் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
அதன்படி மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட நொச்சிமுனையில் உள்ள அன்னாரது உருவச்சிலைக்கு இன்று காலை மாலை அணிவித்து ஜனனதினம் அனுஸ்டிக்கப்பட்டது.
இதேவேளை பேராசிரியர் சாண்டோ சங்கரதாஸ் இலங்கையில் மட்டுமன்றி இந்தியா மற்றும் உலகநாடுகள் பலவற்றில் சாண்டோ கலையின் மூலம் பல்வேறு வீர தீர செயற்பாடுகளை முன்னெடுதுவந்துள்ளமையால் இவருக்கு பிரித்தானிய இளவரசியினால் “இரும்பு மனிதர்” என்ற பட்டமும் வழங்கப்பட்டிருந்தது.
குறித்த நிகழ்வில் அவரது வழித்தோன்றல்களாக சாண்டோ கலையினை தொடர்ந்தவர்கள்,தொடர்ந்து வருபவர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.