இந்த மாத இறுதியில் ரஷ்யாவின் புதிய தாக்குதலை நாடு எதிர்பார்ப்பதாக உக்ரைனின் பதவி விலகும் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் தெரிவித்துள்ளார்.
அனைத்து மேற்கத்திய ஆயுதங்களும் அதற்குள் வந்திருக்காது, ஆனால் உக்ரைனில் ரஷ்யப் படைகளைத் தடுக்க போதுமான இருப்புக்கள் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கிழக்கில் உள்ள பக்முட், வுஹ்லேடர் மற்றும் லைமன் ஆகிய இடங்களில் துருப்புக்கள் கடுமையாக சண்டையிட்டு வருவதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரெஸ்னிகோவின் கருத்துக்கள் அவர் பாதுகாப்பு அமைச்சராக பதவி நீக்கம் செய்யப்படுவார் என அறிவிக்கப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு வந்துள்ளது.
இராணுவ புலனாய்வுத் தலைவர் கைரிலோ புடானோவ் அவரது இடத்துக்கு நியமிக்கப்படுவார் என்று ஸெலென்ஸ்கியின் கட்சியைச் சேர்ந்த உக்ரைனிய அரசியல்வாதி ஒருவர் தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சகத்தை பாதித்துள்ள தொடர்ச்சியான ஊழல் மோசடிகளுக்கு மத்தியில் இந்த மாற்றம் வந்துள்ளது.
இராணுவத்திற்கான உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக சில பாதுகாப்பு அதிகாரிகள் பொது நிதியை மோசடி செய்ததாக சந்தேகிக்கப்படுவதாக வெளியான ஊடக அறிக்கைகளை ரெஸ்னிகோவ் மறுத்துள்ளார்.