கட்சி என்ற ரீதியில் தேர்தலுக்கு தயாராக உள்ளோம் என்றும் வெற்றியோ தோல்வியோ தேர்தலில் போட்டியிடுவோம் என்றும் ஆளும்கட்சி உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
தேர்தலை கண்டு அஞ்வச வேண்டிய தேவை எமக்கு கிடையாது என்றும் கடந்த காலத்தை போன்று இம்முறையும் தேர்தலில் அமோக வெற்றிப் பெறுவோம் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
தற்போதைய அரசியல் பரப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு சவால் விடுக்கும் வகையில் எந்தவொரு அரசியல் கட்சிகளும் கிடையாது என்றும் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியினருக்கு மக்கள் மத்தியில் செல்ல முடியாத காரணத்தினால் தான் அவர்கள் தேசிய மக்கள் சக்தி என்று பெயரை மாற்றி உள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
இந்த நாட்டு மக்களுக்கு அளப்பரிய சேவையாற்றிய ராஜபக்ஷர்களுக்கு மக்கள் தொடர்ந்தும் ஆதரவு வழங்குவார்கள் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.