துருக்கி – சிரிய எல்லையில் பதிவாகிய பாரிய இரு நிலநடுக்கங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில் 4 ஆயிரத்து 300 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காக நிபுணர் குழுக்கள், மோப்ப நாய்கள், அதி நவீன சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை நாடுகள் பலவும் அனுப்பி வருகின்றன.
துருக்கியில் மாத்திரம் இதுவரை 2 ஆயிரத்து 900 பேர் உயிரிழந்துள்ளதாக மேற்கொள்காட்டி சர்வதேச செய்திகள் வெளியாகியுள்ளன.
மீட்புப்பணிகள் தொடர்ந்து வருகின்ற நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 08 மடங்கினால் அதிகரிக்கலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
துருக்கியின் Gaziantep நகருக்கு அருகில் அந்நாட்டு நேரப்படி நேற்று அதிகாலை 4:17 அளவில் 7.8 மெக்னிடியூட் அளவிலான பாரிய நிலநடுக்கம் பதிவாகியது.
இந்த நிலநடுக்கத்தின் பின்னர் அதிகளவான அதிகமான சிறிய நில அதிர்வுகளும் பதிவாகியிருந்தன.
துருக்கி நேரப்படி நேற்று பிற்பகல் 1.30 க்கு 7.5 மெக்னிடியூட் அளவிலான மற்றுமொரு பாரிய நிலநடுக்கம் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.