துருக்கி அரசாங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டால் உதவிகளை வழங்க இலங்கை தயாராக இருக்கின்றது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அதற்காக இராணுவத்தினர், மருத்துவர்கள் மற்றும் பொறியியலாளர்கள் உட்பட 300 பேர் கொண்ட இராணுவக் குழுவொன்றை களமிறக்க இலங்கை தயாராக இருக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, துருக்கியில் உள்ள 13 இலங்கையர்களுடன் தொடர்ந்தும் தொடர்பில் உள்ளதாக இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.
இதுவரையில் 14 இலங்கையர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாக துருக்கிக்கான இலங்கை தூதுவர் அசாந்தி திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
மற்றுமொரு நபரான பெண்ணுடன் தொடர்புடைய ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.