தெற்கு பெருவில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளனர், 20 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் இருவரை காணவில்லை.
பேரழிவின் தாக்கம் அதிகமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
நிலச்சரிவு ஏற்பட்ட மலை நகரமான செகோச்சாவில் உள்ள பெருவின் சுகாதார அமைச்சகத்தின் பணியகத்தின்படி, மேலும் இருபது பேர் சிறு காயங்களுக்கு சிகிச்சை பெற்றனர்.
காமனா மாகாணத்தில் ஓகோனா ஆற்றின் கரையில் அமைந்துள்ள செகோச்சாவில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால்
நிலச்சரிவின் பின்விளைவுகளை நிவர்த்தி செய்ய, சுகாதார அமைச்சகம்ஈ ‘மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மனநல நிபுணர்களைக் கொண்ட இரண்டு படைப்பிரிவுகளை அந்தப் பகுதிக்கு அனுப்புவதாக அறிவித்துள்ளது. அத்துடன் 150 கிலோ (330 பவுண்டுகள்) மருந்துகளையும் இப்பகுதிக்கு அனுப்பவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுதவிர, பெருவியன் இராணுவம் ஹெலிகொப்டர்களை அப்பகுதிக்கு அனுப்பியுள்ளது, மனிதாபிமான உதவி, குடிநீர் மற்றும் மணல் மூட்டைகளை அவசரகால இடத்திற்கு கொண்டு சென்றது.