வர்த்தகர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
பத்தரமுல்லையில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக இவர்களை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 02ஆம் திகதி பெலவத்த பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றின் நீச்சல் தடாகத்தில் ஆடை வியாபார உரிமையாளரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
பின்னர் சந்தேக நபர்களை கைது செய்த அவர்களிடம் நடத்திய விசாரணையில் இது கொலை என தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.