இலங்கைக்கானகடன் உதவிகள் சர்வதேச நாணய நிதியம் வழங்குவதற்கான உத்தரவாதத்தை தாம் வழங்குவதாக பாரிஸ் கிளப் நாடுகள் அறிவித்துள்ளன.
இலங்கையின் நீண்ட கால கடன் நிலைத்தன்மை உட்பட இலங்கையின் பெரிய பொருளாதார மற்றும் நிதி நிலைமையை ஆராய்ந்த பின்னர் இதனை அறிவித்துள்ளன.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் கூடிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவும், ஏனைய கடன் வழங்குநர்களுடனான பேச்சுக்கு ஆதரவளிக்கவும் தீர்மானித்துள்ளன.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கான தங்கள் அர்ப்பணிப்பை பாரிஸ்கிளப் நாடுகள் வெளியிட்டுள்ளன.
அத்தோடு இந்தியா வழங்கிய குறிப்பிட்ட மற்றும் நம்பகமான நிதி உத்தரவாதங்களுக்கும், பாரிஸ் கிளப்புடனான ஒத்துழைப்பிற்கும் உறுப்பினர்கள் மேலும் பாராட்டு தெரிவித்தனர்.
இதேநேரம் ஹங்கேரி, சவூதி அரேபியா, சீனா உட்பட இலங்கைக்கு கடன் வழங்கிய ஏனைய தரப்பினரும் இவ்வாறான செயற்பாட்டினை முன்னெடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளன.