ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது அமர்வு இன்று காலை ஜனாதிபதி தலைமையில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பமாகவுள்ளது.
இதன்போது அரசியலமைப்பின் மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை ஜனாதிபதி காலை 10:00 மணிக்கு முன்வைக்க உள்ளார்.
அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து, சபை நாளை காலை 9.30 மணி வரை ஒத்திவைக்கப்படும்.
இந்த நிகழ்வில் வெளிநாட்டு இராஜதந்திரிகள் , பாதுகாப்புத் தலைவர்கள் மற்றும் அதிதிகள் என பலர் பங்கேற்கவுள்ளனர்.
இன்றைய அமர்வை ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் டளஸ் அழகப்பெரும தலைமையிலான தரப்பினரும் புறக்கணிக்க தீர்மானித்துள்ளனர்.
எனினும், ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்துள்ள பங்காளிக் கட்சிகள் இந்த நிகழ்வில் பங்கேற்கும் என தெரிவிக்கப்படுகின்றது.