துருக்கி, சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு உதவுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் பாதித்த 70 இற்கும் மேற்பட்ட இந்தியர்களிடம் இருந்து உதவி கேட்டு அழைப்பு வந்துள்ளது.
சம்பந்தபட்ட அதிகாரிகளை கொண்டு தீர்வு காண முயற்சிகள் நடந்து வருகிறது.
இந்தியர்கள் பாதிப்பு குறித்து இருநாட்டு தூதரகங்களிடம் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.