இந்திய மத்திய அமைச்சர் எல்.முருகன் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்று(வியாழக்கிழமை) இலங்கைக்கு வருகை தரவுள்ள அவர், நான்கு நாட்கள் இங்கு தங்கியிருப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விஜயத்தின் போது, வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காக இந்தியா வழங்கிய நிதியுதவியின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ள திட்டங்களை பார்வையிடவுள்ளார்.
அத்துடன், இந்த விஜயத்தின் போது, 2015 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியினால் அடிக்கல் நாட்டப்பட்ட யாழ்ப்பாண கலாசார மையத்தையும் முருகன் இலங்கை மக்களுக்கு அர்ப்பணிக்கவுள்ளார்.