மேற்கு லங்காஷயர் இடைத்தேர்தலில் தொழிற்கட்சியின் 50 வயதான ஆஷ்லே டால்டன் வெற்றி பெற்றுள்ளார்.
உள்ளூர் தொண்டு நிறுவனத்தில் பகுதி நேரமாக பணிபுரியும் டால்டன், கன்சர்வேடிவ்களை விட 8,326 வாக்குகள் பெரும்பான்மையைப் பெற்றார்.
17 ஆண்டுகளாக அந்த இடத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய தொழிற்கட்சியின் மூத்த பெண்மணி ரோஸி கூப்பர் இராஜினாமா செய்ததால் அங்கு மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது.
கன்சர்வேடிவ் ஆட்சி செய்வதில் மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்ற செய்தியை வாக்காளர்கள் அனுப்பியுள்ளதாக தனது வெற்றி உரையில், டால்டன் கூறினார்.
மேலும், குழந்தைகளின் வறுமை மற்றும் ஆம்புலன்சுகளுக்காகக் காத்திருக்கும் மக்கள் போன்ற பெரிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான எந்த யோசனையும் அல்லது திட்டமும் கன்சர்வேடிவ் அரசாங்கத்திடம் இல்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.
கடும் குளிரான சூழலில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 32 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளன. இது டோரிகளில் இருந்து தொழிற்கட்சிக்கு 10.52 சதவீதம் மாறியது.
வெள்ளிக்கிழமை அதிகாலையில் அறிவிக்கப்பட்ட முடிவு, டிசம்பரில் ஸ்ட்ரெட்ஃபோர்ட் மற்றும் உர்ம்ஸ்டன் மற்றும் சிட்டி ஆஃப் செஷயர் ஆகிய இரு இடங்களையும் கட்சி எளிதாகக் கைப்பற்றிய பின்னர் சமீபத்திய மாதங்களில் தொழிற்கட்சியின் மூன்றாவது இடைத்தேர்தல் வெற்றியாகும்.
தொழிலாளர் கட்சியின் ஆஷ்லே டால்டன் 14,068 வாக்குகளைப் பெற்று முதலிடம் பிடித்தார்.
கன்சர்வேடிவ் கட்சியின் மைக் ப்ரெண்டர்காஸ்ட் 5,742 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடமும், ரீபோர்ம் யுகே கட்சியின் ஜோனாதன் கே 997 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடமும் பிடித்தனர்.