ஆப்கானிஸ்தானில் இருந்து பிரித்தானிய துருப்புகள் வெளியேறியது பிரித்தானியாவிற்கு ஒரு இருண்ட அத்தியாயம்’ என்று மூத்த கன்சர்வேட்டிவ் டோபியாஸ் எல்வுட் கூறியுள்ளார்.
எல்வுட் தலைமையிலான பாதுகாப்புக் குழு, ஆப்கானிஸ்தானில் இருந்து பிரித்தானியா வெளியேறியது குறித்து நேர்மையான விசாரணையை நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறது
தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வர வழிவகுத்த இந்த வெளியேற்றம், நாடு மீண்டும் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறி வருவதை எடுத்துரைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறிக்கை எச்சரித்துள்ளது.
பிரித்தானியாவுக்கு வரதகுதியான ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் ஆப்கானிஸ்தானில் ஆபத்தில் வாழ்கின்றனர் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த அறிக்கைக்கு பதிலளித்த அரசாங்கம், ஆப்கானிஸ்தானில் இருந்து முடிந்தவரை பலரை பாதுகாப்பாக வெளியேற்ற அயராது உழைத்ததாக கூறியது.
பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘ஆப்கானிஸ்தானில் பிரித்தானிய ஆயுதப் படைகளுக்காக பணியாற்றிய அல்லது உடன் பணியாற்றிய ஆப்கானிய குடிமக்களுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம், மேலும் இன்றுவரை நாங்கள் திட்டத்தின் கீழ் 12,100 நபர்களை இடமாற்றம் செய்துள்ளோம்’ என கூறினார்.
சுமார் 300 தகுதியான ஆப்கானியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை, பிரித்தானியாவுக்குத் திரும்பக் கொண்டு வருவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக திணைக்களம் மதிப்பிட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறிக்கைக்கு உரிய நேரத்தில் முழுமையாக பதிலளிப்பதாக அது கூறியது.