கிறித்தவம், இஸ்லாம் போன்ற மதம் மாறிய மக்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு தடை இருப்பதாக தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இருக்கும் தடையை நீக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்களவையில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இந்த மக்களை பட்டியலினத்தவர் பட்டியலில் இணைத்து இட ஒதுக்கீட்டினை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.