நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு இந்தியாவில் இருந்து மருந்து மற்றும் நிவாரணப் பொருட்களுடன் புறப்பட்ட 7ஆவது விமானம் துருக்கியை சென்றடைந்தது.
மருந்து மாத்திரைகளுடன், இசிஜி கருவிகள், சிரெஞ்ச் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் மற்றும் நிவாரணப்பொருட்களுடன் காசியாபாத் விமானப்படைத் தளத்தில் இருந்து புறப்பட்ட விமானம் துருக்கியின் அதானா நகருக்கு சென்றடைந்தது.
நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக வழங்கப்படுவதாக களத்தில் உள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே, துருக்கியின் ஹடாய் பகுதியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இந்திய இராணுவம், கள மருத்துவமனை ஒன்றை அமைத்துள்ளது.
6 மணி நேரத்திற்குள்ளாக அமைக்கப்பட்ட இந்த 60 பாரா ஃபீல்ட் மருத்துவமனை, காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க 24 நேரமும் செயற்பட்டு வருகிறது.
மருத்துவ உதவிகளை வழங்குவதற்காக 96 பேர் இந்திய இராணுவத்திலிருந்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
இம்மருத்துவமனையில் இதுவரை 800க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் 10 பேருக்கு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.