துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் ஜேர்மனியில் உள்ள உறவினர்களுடன் தற்காலிகமாக தங்க அனுமதிக்கப்படுவார்கள் என ஜேர்மனி அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது அவசர உதவி என்று ஜேர்மன் உள்துறை அமைச்சர் நான்சி ஃபேசர் தெரிவித்துள்ளார்.
துருக்கிய அல்லது சிரிய குடும்பங்கள் பேரழிவு பகுதியில் இருந்து தங்கள் நெருங்கிய உறவினர்களை அதிகாரத்துவம் இல்லாமல் ஜேர்மனியர்கள் தங்கள் வீடுகளுக்கு அழைத்து வர அனுமதிக்கப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதனிடையே, துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் காயம் அடைந்தவர்களுக்கு காஸா மக்கள் ரத்த தானம் வழங்கி வருகின்றனர்.
மேலும், ஃபிஃபா உலகக் கிண்ணத் தொடரின் போது பயன்படுத்தப்பட்ட 10,000 கேபின்கள் மற்றும் கேரவன்களை துருக்கி மற்றும் சிரியாவுக்கு கட்டார் அனுப்பவுள்ளது.
சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.