கடந்த வாரம் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பேரழிவிற்குள்ளான சிரியாவிற்கு உதவிகளை வழங்குவதற்காக மேலும் இரண்டு எல்லைக் கடவைகளை திறக்க சிரியா அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
தாங்கள் இப்போது ஒரே ஒரு கடவை மட்டுமே பயன்படுத்துகின்ற நிலையில், இது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பல சிரியர்கள் தங்கள் போரினால் பாதிக்கப்பட்ட நாட்டிற்கு உதவி இல்லாததால் கோபமடைந்துள்ளனர்.
நாட்டின் மீது விதிக்கப்பட்ட மேற்கத்திய பொருளாதாரத் தடைகளின் தாக்கத்தால் மீட்புப் பணிகளில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி பஷர் அல்-அசாத் அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
ஆனால், அசாத் அரசாங்கத்தின் தவறான நிர்வாகம் மற்றும் நாட்டின் அனைத்துப் பகுதிகளுடனும் ஈடுபட மறுப்பதும் முக்கிய தடைகள் என்று சர்வதேச உதவிக் குழுக்கள் கூறுகின்றன.
துருக்கியில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வீடிழந்துள்ளனர், சிரியாவில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று உதவி அமைப்புகள் எச்சரிக்கின்றன.
இரு நாடுகளிலும் உள்ள மீட்புக் குழுக்கள் இப்போது பரந்த பகுதியில் மீட்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டன, மேலும் உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் மங்கி வருகின்றன.
இரு நாடுகளிலும் பயங்கர நிலநடுக்கத்தில் ஏறக்குறைய 40,000பேர் உயிரிழந்துள்ளதாக அறியப்படுகிறது.