தேர்தலை ஒத்திவைப்பதற்கும் நடத்தாமல் இருப்பதற்கும் அரசாங்கம் கோழைத்தனமான நடவடிக்கை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.
மக்களின் இறையாண்மையுடன் விளையாடும் அரசாங்கத்திற்கு நெருக்கடியான தருணம் வந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எச்சரித்துள்ளார்.
ஆகவே அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டிய தருணம் வந்துவிட்டதாக சஜித் பிரேமதாச அறிக்கையொன்றின் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
தபால் மூல வாக்களிப்பிற்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்குப் பணம் ஒதுக்குவதில்லை என்று முடிவு வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
22வது முறையாக தேர்தலை ஒத்திவைக்கும் மற்றொரு கோழைத்தனமான முயற்சியை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது என்றும் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.
தேர்தலை ஒத்திவைக்க சதி செய்யும் அனைவருக்கும் எதிராக தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு எதிராக நீதியை நிலைநாட்ட பாடுபடுவோம் என்றும் கூறியுள்ளார்.