தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிக்கும் நடவடிக்கைகள் இன்று (15) ஆரம்பமாகவுள்ளது.
சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரும் நடவடிக்கை இன்றோடு நிறைவுக்கு வருகின்றது.
உறுப்பினர்களை நியமிக்க ஏற்கனவே காலதாமதம் ஏற்பட்டுள்ள நிலையில் விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீடிக்கப்பட மாட்டாது என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
சுயாதீன ஆணைக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதற்கு கிட்டத்தட்ட 100 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.