ஆயுதங்கள் மட்டுமே ரஷ்யா புரிந்துகொள்ளும் மொழி என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பின் ஒரு வருடத்தைக் குறிக்கும் வகையில் பிபிசிக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது, ரஷ்யாவுடனான அமைதி ஒப்பந்தத்தில் தனது நாட்டின் எந்தப் பகுதியையும் விட்டுக்கொடுக்க முடியாது என குறிப்பிட்டார்.
ஒரு முன்னறிவிக்கப்பட்ட வசந்த தாக்குதல் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக கூறிய அவர், ரஷ்ய தாக்குதல்கள் ஏற்கனவே பல திசைகளில் இருந்து நடந்துவருவதாக கூறினார்.
எவ்வாறாயினும், உக்ரைனின் படைகள் ஒரு எதிர்தாக்குதலைத் தொடங்கும் வரை ரஷ்யாவின் முன்னேற்றத்தை எதிர்த்து நிற்க முடியும் என்று அவர் நம்புகிறார். இருப்பினும், அவர் மேற்கில் இருந்து அதிக இராணுவ உதவிக்கான தனது அழைப்புகளை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.
மேலும், நிச்சயமாக, நவீன ஆயுதங்கள் மேற்கத்திய இராணுவ உதவிகள் அமைதியை விரைவுபடுத்துகின்றன என கூறினார்.