வடக்கு அயர்லாந்து நெறிமுறை தொடர்பான ஒப்பந்தம் விரைவில் எட்டப்படலாம் என்ற ஊகங்களுக்கு மத்தியில், உள்ளூர் அரசியல் கட்சிகளைச் சந்தித்து பிரதமர் ரிஷி சுனக் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
பிராந்தியத்தின் பிரெக்ஸிட்டுக்குப் பிந்தைய வர்த்தக ஏற்பாடுகள் குறித்து அடுத்த வாரத்தில் ஒரு ஒப்பந்தம் எட்டப்படலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களை சந்திப்பதற்காக ஜேர்மனிக்கு செல்வதற்கு முன்னர், சுனக் இன்று (வெள்ளிக்கிழமை) காலை பெல்ஃபாஸ்டில் உள்ளூர் கட்சி தலைவர்களை சந்திப்பார்.
அவரது வெளியுறவுச் செயலர் ஜேம்ஸ் க்ளெவர்லி, இன்று (வெள்ளிக்கிழமை) பிரஸ்ஸல்ஸில் ஐரோப்பிய ஆணையத்தில் இடம்பெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.
ஜேம்ஸ் க்ளெவர்லி, ஐரோப்பிய ஆணையத்தின் துணைத் தலைவர் மார்கோஸ் செஃப்கோவிக்கை சந்திப்பார் என வெளியுறவு அலுவலகம் உறுதிப்படுத்தியது.
வடக்கு அயர்லாந்து நெறிமுறை என்பது பிரெக்சிட்டிற்குப் பிறகு ஐரிஷ் நில எல்லையில் சரக்குகளின் சுதந்திரமான இயக்கத்தை உறுதிசெய்ய ஒப்புக்கொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தமாகும். இது வடக்கு அயர்லாந்தில் ஒரு அரசியல் முட்டுக்கட்டையின் மையத்தில் உள்ளது,