நெல்லை 160 ரூபாவிற்கு மேல் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிளிநொச்சி பிரஜைகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
கிளிநொச்சி பிரஜைகள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயேஇ குழு செயலாளர் சிங்கராசா ஜீவநாயகம் இந்த கோரிக்கையினை முன்வைத்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பரந்தன் விஜயத்தின் போதுஇ நெல்லினை 100 ரூபாவிற்கு கொள்வனவு செய்யுமாறு கூறிய போதும் அதனை ஏற்க விவசாயிகள் தயாரில்லை என்பதை அறிய முடிவதாக அவர் தெரிவித்தார்.
மேலும்இ விவசாயிகள் ஒவ்வொருவரும் உற்பத்தி செலவுக்கு மேலதிகமாக 25000 ரூபாவிற்கு மேலாக இழப்பினை சந்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.