தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு இன்று உயர் நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
குறித்த மனுவை 23ஆம் தேதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதாக உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட போதும் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறுவதற்கு முன்னர் பரிசீலிக்குமாறு மனுதாரர் தனது சட்டத்தரணி ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்படி, இந்த மனுவை, நீதிபதிகள் எஸ் துரைராஜா மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய இருவர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு 22, 23, 24 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த போதிலும், அது காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.