ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பின் ஊடாக தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி தற்போதைய நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே தற்போது உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தற்போதைய நாடாளுமன்றம் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கவில்லை என்பதனால் உடனடசியாக பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என கூறியுள்ளார்.
தற்போது அரசியலமைப்பு விதிகள் அல்லது சட்டத்தின் பிரகாரம் தேர்தலை நடத்துவது குறித்த தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தேர்தலை நடத்துவது குறித்த முடிவு அவரது விருப்பத்தின் பேரில் மட்டுமே எடுக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.