எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலை இடைநிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு ஆணை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மற்றுமொரு மனு இன்று(வியாழக்கிழமை) உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
ஓய்வுபெற்ற இராணுவ கேணல் டபிள்யூ.எம்.ஆர். விஜேசுந்தரவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள இந்த வேளையில் தேர்தலை நடத்துவது பொருத்தமானதல்ல என்ற கருத்து சமூகத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியம் நாட்டுக்கு கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளதாகவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதால் நாட்டுக்கோ, பொதுமக்களுக்கோ எந்த நன்மையும் ஏற்படாது என சுட்டிக்காட்டியுள்ள அவர், தேர்தலை நடத்துவதைத் தடுக்க தேர்தல் ஆணைக்குழுவிற்கு உத்தரவு பிறப்பிக்குமாறு உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.