உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அதிகாரம் புதிய திசையில் நகரும் போக்கு காணப்படுகின்றமை காரணமாகவே ஆட்சியில் உள்ளவர்கள் தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பதுளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.