உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான நிதியுதவியை நிறுத்தும் அரசாங்கத்தின் தீர்மானம் நியாயமற்றது என இலங்கை திருச்சபை தெரிவித்துள்ளது.
இலங்கை திருச்சபையின் தலைமை பேராயர் துஷாந்த ரொட்ரிகோ விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தன்னிச்சையானது எனவும் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் சுதந்திர தினத்தை முன்னிட்டு பொழுதுபோக்கு காரியங்களை நடத்திய அரசுக்கு தேர்தல் நிதியை நிறுத்த எந்த தார்மீக உரிமையும் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாடுகளின் கடன்களை மீள செலுத்த தவறிய பிறகும், தேர்தலுக்கு நிதியளிக்க முடியவில்லை என்று கூறும் எந்தவொரு அரசாங்கமும் பதவியில் நீடிக்க சட்டப்பூர்வமான அதிகாரம் இல்லை எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.