கொள்ளுப்பிட்டி மற்றும் கோட்டை பகுதிகளில் எதிர்ப்பு பேரணிகள் நடைபெறுவதைத் தடுககும் வகையில் கோட்டை நீதிவான் இன்று (26) உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அதன்படி நிதி அமைச்சு, ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட சில இடங்களில் நுழைவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த பகுதிகளுக்கு செல்ல கூடாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க உட்பட 26 பேருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி எதிர்ப்பு பேரணியொன்றை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.