உள்ளூராட்சித் தேர்தலுக்கு நிதியை வழங்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
அதன்படி எதிர்வரும் 3ம் திகதி மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதாக இன்று (திங்கட்கிழமை) காலை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதியை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்குமாறு கோரி அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மனுதாக்கல் செய்திருந்தார்.