சீனாவிடமிருந்து திபெத்திய சுதந்திரம் குறித்த பிரச்சினையை வலியுறுத்தி டாக்காவில் பொதுமக்கள் பீஜிங்கிற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திபெத்துக்கு சுதந்திரம் வழங்குவதற்கு உலக சமூகம் சீனாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கேட்டுக்கொண்டனர்.
டாக்காவில் உள்ள ஷாபாக் தேசிய அருங்காட்சியகம் முன்பு முக்திஜோதா மஞ்சாவின் தலைமையில் ஒற்றுமைப் பேரணி நடத்தப்பட்டுள்ளது.
‘சீனா மனித உரிமைகளை மீறுகிறது’, ‘திபெத் சீனாவின் பகுதி அல்ல’, ‘சுதந்திர திபெத்திலிருந்து சீனா அவுட்’ மற்றும் பல பதாகைகளை ஏந்தியவாறு போராட்டக்காரர்கள் பிரசன்னமாகியிருந்தனர்.
திபெத்தியர்கள் பெப்ரவரி13ஐ சுதந்திர தினமாகக் குறிக்கின்றனர், 1913ஆம் ஆண்டில் திபெத்திய ‘சுதந்திரப் பிரகடனம்’ அறிவிக்கப்பட்டது.
பின்னர், மார்ச் 1959இல் திபெத் சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்டது, அதன் பின்னர் திபெத்தியர்கள் மிக மோசமான மனித உரிமை மீறல்களை எதிர்கொண்டுள்ளனர்.
சமீபத்திய அறிக்கையில், ஐ.நா.வல்லுனர்கள், திபெத்திய மக்களைக் கலாசார ரீதியாகவும், மத ரீதியாகவும், மொழி ரீதியாகவும் ஒருகுடியிருப்புப் பள்ளி முறை மூலம் ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்ட சீன அரசின் கொள்கைகளால் திபெத்திய சிறுபான்மையினரின் சுமார் ஒருமில்லியன் குழந்தைகள் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேநேரம், ‘சமீபத்திய ஆண்டுகளில், திபெத்திய குழந்தைகளுக்கான குடியிருப்புபள்ளி அமைப்பு சர்வதேச மனித உரிமைகள் தரத்திற்கு மாறாக, பெரும்பான்மையான ஹான் கலாசாரத்தில் திபெத்தியர்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் ஒரு கட்டாய பெரிய அளவிலான திட்டமாக செயல்படுவதை நாங்கள் மிகவும் கவலையடைகிறோம்’ என்று ஐ.நா நிபுணர்கள் தெரிவித்தனர்.
அதிகரித்து வரும் சீன அட்டூழியங்களால், திபெத்தில் இருந்து ஏராளமான திபெத்தியர்கள் இடம்பெயர்ந்து உலகின் பல்வேறு பகுதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
அவர்கள் சுதந்திர திபெத்தை கோரி, தங்களுக்கு நீதி வழங்க ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச சமூகத்தின் அவசர தலையீட்டை கோருகின்றனர்.
திபெத்தியர்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு பங்களாதேச ஆதரவு பெருகி வருவதற்கு டாக்காவில் நடந்த ஒற்றுமை அணிவகுப்பு சான்றகின்றமை குறிப்பிடத்தக்கது.