தற்போதைய சூழ்நிலையில் நாட்டுக்கு தேர்தல் அவசியமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு உண்ண உணவு வழங்க வேண்டும் அதுவே முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு கட்சியென ஒன்று இல்லை எனவும், மக்கள் பக்கமே தான் நிற்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், சுகாதார அமைச்சு போன்று ஒரு அமைச்சு வழங்கப்பட்டால் தன்னால் முழுமையான பங்களிப்பை வழங்கக்கூடியதாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.