தேர்தலை நடத்தாமல், ஒத்திவைக்காமல் தந்திரங்களை பிரயோகித்த ஜனாதிபதிக்கு நீதிமன்றம் உரிய பதில்களை வழங்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கத்திற்கு எந்த உரிமையும் இல்லை எனவும் அதனை அரசாங்கம் உடன் நடத்த வேண்டும் எனவும் எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்ட சில தரப்பினர் தேர்தல் தொடர்பாக தொடர்ந்தும் மௌனம் காத்து வருவதாக எதிர்கட்சி தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் தேர்தலில் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் எதிர்காலத்தில் தம்மை அர்ப்பணித்து செயற்படுவோம் என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
திவாலான நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுக்கும் என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.